SA vs IND : முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்.? - Seithipunal
Seithipunal


தென்ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி தென்ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. 

டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததால், ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்க உள்ளது. மேலும், புதிய கேப்டன் கேஎல் ராகுல் எப்படி கேப்டன்சி செய்யப்போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனிடையே ஒருநாள் தொடருக்கான தங்கள் அனுபவங்களையும், ஆலோசனைகளையும் முன்னாள் வீரர்கள் தங்கள் அணிகளுக்கு வழங்கி வருகின்றனர். 

இந்த வகையில் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர், முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் தனது ஆடும் லெவன் தேர்வு செய்து அறிவித்துள்ளார். 

வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ள ஆடும் லெவன் : 

கே.எல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாகூர், புவனேஷ் குமார் அல்லது முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பும்ரா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wasim jaffer india playing xi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->