முதல் ஒருநாள் போட்டி.. இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி இன்று மோதல்.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு மூன்று ஒரு நாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதலில் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. அதன்படி, முதல் ஒரு நாள் போட்டி இன்று இரவு 7 மணிக்கு போர்ட்ஆஃப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, மொகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய முக்கிய வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இதனால், இளம் வீரர்களுக்கு இந்தத் தொடர் சிறந்த வாய்ப்பாக இருக்கக்கூடும்.

ஷிகர் தவானுடன் தொடக்க வீரராக சுப்மன் கில் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கப்படுவார். நடு வரிசையில் தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார்கள். சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரில் ஒருவர் மட்டுமே ஆடும் லெவனில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பந்துவீச்சில் ஷர்துல் தாக்குர், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், சாஹல் இடம் பெறுவார் என கூறப்படுகிறது. ஜடேஜா காயம் காரணமாக ஒரு நாள் தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Indies vs India ODI Match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->