கால கொடுமை! பஸ்ஸில் ஆபாச கானா பாடல்! கத்தியுடன் சிக்கிய 10 மாநில கல்லூரி புள்ளிக்கோ பாய்ஸ்! - Seithipunal
Seithipunal


சென்னையில் மாநகர பேருந்தில் கத்தியுடன் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் நோக்கி மாநகர பேருந்து வந்து கொண்டிருந்துள்ளது. இந்தநிலையில் சென்னை கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் ஏறிய தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தில் சக பயணிகள் முகம் சுழிக்கும் , வகையில் ஆபாச கானா பாடல்களை பாடி கலாட்டா செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் பெண் பயணிகள் பலரும் ஓட்டுனரிடமும் நடத்துனரிடமும் புகார் தெரிவித்ததார். இந்த சம்பவம் தொடர்பாக நடத்துனர் மாணவர்களிடம் பேசியும் எடுபடாததால் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் பேருந்து முன் கதவை மூடிவிட்டு பேருந்தில் இருந்த மாணவர்களிடம் சோதனை செய்தனர் அவர்களிடம் இரண்டு கத்திகள் குளிர்பானத்தில் மது கலந்து பாட்டில்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மாநில கல்லூரி மாணவர்கள் அருண்,குணசேகரன், இஸ்மாத், பிரதீப், மோகனகிருஷ்ணன் பொன்னேரி இயங்கி வரும் தனியார் கல்லூரி மாணவர் விஜய் சந்தோஷ், மீஞ்சூர் தனியார் கல்லூரி மாணவர் நீரஜ், உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மெரினா கடற்கரைக்கு சென்று மோகனகிருஷ்னன் பிறந்தநாளை கேக் வெட்டி மது அருந்தி கொண்டாடிவிட்டு வந்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர் இதனையடுத்து புகாரின் பேரில் கைதான மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 college students arrested for traveling in city bus in Chennai with knife


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->