கோவை : சுற்றுலா சென்ற 12ஆம் வகுப்பு மாணவன்.. ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி பலி.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி சுற்றுலா சென்ற 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 120 மாணவர்கள் கோவை மாவட்டம் ஆழியாறுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் நேற்று காலை அங்குள்ள தடுப்பணையில் குளித்தபோது, 12ஆம் வகுப்பு மாணவன் லோகசுதன்(17) எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளான்.

இதைப் பார்த்த சக மாணவர்கள் சத்தம் போடவே அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து லோகசுதனை மீட்டு சிகிச்சைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் லோக சுதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஆழியார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் ஆழியார் ஆற்றின் பள்ளிவளங்கால் தடுப்பணை பகுதி குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் பலர் தடையை மீறி குளிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12th class student drowned in Azhiyar barrage and died in kovai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->