தொழிலாளர்களுக்கு 14 - வது ஊழிய ஒப்பந்தம் ஏமாற்றத்தை அளிக்கிறது - ஜி.கே .வாசன்..!
14th employment contract is disappointing for workers
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களில் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த நிறைவேற்றம் எதிர்பார்ப்பிற்கு நேர் மாறாகவும், மிகுந்த ஏமாற்றத்தையும் அளித்திருக்கின்றது.
2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வயது முதிர்வு, விருப்ப ஓய்வு பெற்றுள்ளோர்களுக்கும், காலமான தொழிலாளர் குடும்பத்தினருக்கும், வழங்கப்பட வேண்டியுள்ள பணப்பலன்கள் வழங்குவது குறித்து நிதி ஒதுக்கீடோ, வழங்குவதற்கான அறிவிப்பும் இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
ஊதிய ஒப்பந்த கால அளவு 3 ஆண்டுகளாக இருந்து வந்ததை, தற்பொழுது 4 ஆண்டுகளாக மாற்றியமைத்துள்ளது. இதை அனைத்து தொழிற்சங்கங்களுமே ஏற்றுக் கொள்ளாத நிலையில், அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து உள்ளது. இவற்றை உரிய முறையில் ஆலோசனை செய்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
English Summary
14th employment contract is disappointing for workers