15 நாளில் 15 பேர் பலி - திருவண்ணாமலை மக்களை அலறவிடும் பேய் பயம்.!
15 peoples died at continue accident in thiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, செங்கம்- பெங்களூரு சாலையில் கடந்த 15 நாட்களில் மட்டும் விபத்துகளில் சிக்கி குடும்பத்துடன் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் ,முழு விவரம் இதோ. கடந்த 15ம் தேதி மேல்மலையனூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது கர்நாடகாவை சேர்ந்த எட்டு பேர் சென்ற கார் விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளே கடந்த 23ம் தேதி, விபத்து நடந்த பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் மற்றொரு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஒரு வார காலத்திற்குள் அடுத்தடுத்த விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் ஏராளமான புரளியை கிளப்பி வருகின்றனர். அதாவது இந்த விபத்து நடந்த பகுதி, முன்பு விவசாய பண்ணையாக இருந்ததாகவும், அடர்ந்த காடு போல் இருந்த பகுதியை சீரமைத்து இந்த சாலை அமைக்கப்பட்டதாகவும் இரவு 6 மணிக்கு மேல் இந்த பகுதியில் காற்று வேகமாக வீசுவதாகவும், நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் இந்த பகுதியில் குலைத்தபடி சுற்றி வருவதாகவும், சாலையின் நடுவே வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் மர்ம உருவங்கள் நடமாடுவதாகவும் பொதுமக்களிடையே பேசு பொருளாக இருந்து வருகிறது.
மேலும், இந்த பகுதியை கடந்து மதுபானக் கடைக்கு செல்ல வேண்டி இருப்பதால், உள்ளூரைச் சேர்ந்த குடிமகன்கள் பலரும் மதுபானக் கடைக்கு செல்வதையே குறைத்துக் கொண்டிருப்பதாகவும், இப்பகுதியில் வசிக்கும் மக்கள், மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்ப்பதோடு, வீட்டின் வாசலில் வேப்பிலை கட்டி, விளக்கேற்றி சாமி கும்பிட்டு வருவதாகவும் புரளி கிளம்பியுள்ளது.
English Summary
15 peoples died at continue accident in thiruvannamalai