செல்போனால் நேர்ந்த விபரீதம்.! 15 வயது சிறுவன் தற்கொலை.! கடலூரில் பரிதாபம்..! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே விசலூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் தமிழேந்தி(15). இவர் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதைப்பார்த்த தந்தை பாஸ்கரன் தமிழேந்தியை கண்டித்துள்ளார். இதையடுத்து வேலை காரணமாக பாஸ்கரன் மங்கலம்பேட்டை பகுதிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வேலை முடிந்து பாஸ்கரன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தமிழேந்தி தூக்கில் தொங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் உடனடியாக மகனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழேந்தி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

15 years old boy commits suicide in Cuddalore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->