போலீஸ் அதிரடி! சென்னையில் 1500 லிட்டர் மெத்தனால் சிக்கியது! முக்கிய புள்ளி 4 பேர் கைது!
1500 liters of methane trapped in Chennai 4 arrested
சென்னை : செங்குன்றம் வடபெரும்பாக்கம் பகுதியில் மெத்தனால் கலந்த 1500 லிட்டர் ரசாயனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் காவல்துறை தீவிர சோதனை நடத்தி கள்ளச்சாராய ஒழிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையை அடுத்த செங்குன்றம் வடபெரும்பாக்கம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் தனியார் கெமிக்கல் குடோனில், மெத்தனால் கலவை உடன் இருந்த 1500 லிட்டர் ரசாயனம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கௌதம், மலையனூர் பரமசிவம், மாதவரம் பகுதியைச் சேர்ந்த பென்சிலால் மற்றும் ராம்குமார் ஆகியோரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கில் சிக்கிய மாதேஸ்யுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? எனவும் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
English Summary
1500 liters of methane trapped in Chennai 4 arrested