கோழிகுழம்பு சாப்பிட்ட சிறுவன் பலி.. காவல்துறை விசாரணை..!
17 years boy death
கோழி குழம்பு சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் முரளி மற்றும் குடும்பதாருடன் அங்குள்ள குவாரியில் கல்லுடைக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர். இந்நிலையில், சம்பவதன்று, முன்தினம் வைத்த கோழிக் குழம்புடன் சாப்பாடு சாப்பிட்டார்.
சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்ததை கண்டு அதிர்சியடைந்த உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோழிக்குழம்பு சாப்பிட்டபோது, நெஞ்சு பகுதியில் அடைத்து அவர் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.