2 கோடி 29 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர் - அமைச்சர் சக்கரபாணி தகவல்..!
2 crores 29 lakhs ration card peoples in tamilnadu minister sakkarabani info
தமிழக சட்டசபையின் கேள்வி நேரத்தின் போது புதிய ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி திமுக ஆட்சி அமைந்த உடன் 18 லட்சத்து 96 607 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய குடும்ப அட்டை பெற ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 795 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது அதுவும் விரைவில் வழங்கப்படும் இதன் படி மொத்தமாக 2 கோடியே 29 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 37 ஆயிரத்து 699 முழு மற்றும் பகுதிநேர நியாய விலை கடைகளில் புகார் பதிவேடுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
English Summary
2 crores 29 lakhs ration card peoples in tamilnadu minister sakkarabani info