மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 2 கிலோ கஞ்சா பறிமுதல்.!
2 kg drugs seized in ramanathapuram mandabam
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்ப உள்ளதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலையடுத்து மண்டபம் அய்யனார் கடற்கரை பகுதியில் சுங்கத்துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது ஒரு காரிலிருந்து பார்சல்களை சிலர் கடற்கரையில் இறக்கி கொண்டிருந்தனர், அவர்கள் சுங்கத்துறையினரை பார்த்ததும் காரையும், பார்சல்களையும் அங்கேயே விட்டு விட்டு தப்பித்து ஓடினர். இதைத் தொடர்ந்து போலீசார் கார் மற்றும் கடற்கரையில் இறக்கி வைக்கப்பட்டிருந்த பார்சல்களில் சோதனை செய்ததில் தலா 2 கிலோ வீதம் 56 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார் கார் மற்றும் கஞ்சா பொட்டலங்களை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், போலீசார் தப்பித்துச் சென்ற கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
2 kg drugs seized in ramanathapuram mandabam