ஈரோடு || போதைப்பொருளாக வலி நிவாரண மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது.!!
2 peoples arrested for pain killer tablets sales
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு அருகே வலி நிவாரண மாத்திரைகளைப் போதைக்காக விற்பனை செய்யப்படுவதாகப் புகார் வந்தது. அதன் படி, சித்தோடு போலீஸார் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சித்தோடு அருகே ஓடப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த திலகா என்ற பெண் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்து 90 மாத்திரைகள், ஊசிகள் மற்றும் 3 செல்போன்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இருவரும் வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி, நேரடியாக அவற்றை போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்கொண்டு போலீஸார் இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.
English Summary
2 peoples arrested for pain killer tablets sales