2 மாவட்டங்களில் 20 நாட்களுக்கு ஜவுளி தொழில் உற்பத்தி நிறுத்தம்: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மின்சார மானியம் ரத்து மற்றும் உற்பத்தி தேக்கம் போன்றவற்றை கண்டித்து இன்று முதல் 20 நாட்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 2.5 லட்சம் விசைத்தறிவுகள் 20,000 நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகிறது. 

இதன் மூலம் தினசரி ரூ. 100 கோடி மதிப்புள்ள காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். 

இந்நிலையில் மின் கட்டண உயர்வு, நிலை கட்டணம், பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து துணி இறக்குமதி அதிகரித்ததால் உள்நாட்டு துணி விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக துணி உற்பத்தியாளர்கள் மற்ற மாநிலங்களில் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் போட்டி போட்டு தொழில் செய்ய முடியவில்லை. 

வெளிநாடுகளுக்கு, தமிழகத்தில் இருந்த அதிக அளவில் துணி ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் உலக பொருளாதார மாற்றம், இஸ்ரேல் போர் காரணமாக ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது. 

எனவே துணி உற்பத்தியை நவம்பர் 5 முதல் 25ஆம் தேதி வரை நிறுத்த முடிவு செய்ததாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. 

அதன்படி திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மின்சார மானியம் ரத்து மற்றும் உற்பத்தி தேக்கம் போன்றவற்றை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் காரணமாகவே 20 நாட்களுக்கு இந்த 2 மாவட்டங்களிலும் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 days shutdown textile industry 2 districts


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->