மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி.!
3 killed in poison gas attack in Madurai Rs 10 lakh financial assistance to each family
மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை நேதாஜி நகரில் கழிவுநீர் தொட்டியில் மோட்டார் பழுது பார்த்த போது விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த நிறுவனம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலைகளை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வாங்கினார்.
English Summary
3 killed in poison gas attack in Madurai Rs 10 lakh financial assistance to each family