கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி.!
3 killed in poison gas attack in septic tank
மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கிய 3 பேர் பலியானதை அடுத்து 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகுமார் என்ற தொழிலாளி தவறி கழிவுநீர் தொட்டியில் விழுந்ததாகவும், அவரை காப்பாற்ற முயன்ற சரவணன் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டி உள்ளே இறங்கிய போது 3 பேரையும் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
English Summary
3 killed in poison gas attack in septic tank