தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம்.!
30.05.2023 weather Report
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை விருதுநகர் தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளையும் பல்வேறு இடங்களில் கன மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை
சென்னையில் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
ஜூன் 2 மற்றும் 3ம் தேதிகளில் மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் இலங்கை கடற்பகுதிகள் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரை வீசும் எனவும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
English Summary
30.05.2023 weather Report