#BREAKING || மதுரையில் 30 கிலோ "மெத்தபெட்டமைன்" போதைப் பொருள் பறிமுதல்.!!
30kg methamphetamine seized in madurai railway station
டெல்லியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருளை கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இந்த கடத்தலில் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்திய மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரது வீட்டின் பூட்டை உடைத்து அதிரடியாக சோதனை நடத்திய மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் தகவல் வெளியானது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் சென்னையில் உள்ள கொரியர் நிறுவனத்தில் நேற்று மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மதுரை ரயில் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் செய்த சென்னை சேர்ந்த சிலமன் பிரகாஷ் என்பவர் போதை பொருளை கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் மதுரை ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
மதுரை வந்து இறங்கிய சிலம்பன் பிரகாஷை அதிரடியாக சுற்றி வளைத்த அதிகாரிகள் அவரிடம் இருந்து 30 கிலோ மெத்தபட்ட மெயின் போதைப் பொருளை பருமுதல் செய்ததோடு அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளியில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதை பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது மதுரையில் அதே வகையான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளத.
English Summary
30kg methamphetamine seized in madurai railway station