ஒட்டன்சத்திரம் அருகே பயங்கர விபத்து - 2 பைக்குகள் மோதிக்கொண்டதில் 4 பேர் உயிரிழப்பு
4 killed in two bikes collision in oddanchatram
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 2 மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் சீத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர்களான ரத்தினம் (59), சேகர் (35) ஆகிய இரண்டு பேரும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஒட்டன்சத்திரம் நோக்கி சுதாகர் (24) மற்றும் துரையன் (21) வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
4 killed in two bikes collision in oddanchatram