தமிழ்நாட்டில் 40% பேருக்கு சர்க்கரை நோய்? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 400 பேரிடம் மேற்கொண்ட ரத்த பரிசோதனையில் 40 சதவீதத்தினருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கொடுத்துள்ள விளக்கத்தில் "சென்னை, திருச்சி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, தருமபுரி மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்டவர்களின் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் 40 சதவீதம் பேருக்கு புதிதாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் தங்களுக்கு இதுபோன்ற பாதிப்பு இருப்பதை அறியாமல் இருப்பதை ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அறிகுறிகள் ஏதும் இல்லாமல் உள்ள சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்தை முறையாகக் கவனிக்காவிட்டால் அது உடல் உறுப்புகளை பாதிப்பதுடன் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை ரத்த சர்க்கரை அளவையும், உயர் ரத்த அழுத்தத்தையும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் பரிசோதனைகள் கட்டணமின்றி செய்யப்படுகின்றன. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

40 percentage diabetes people in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->