அதிரடியாக உயர்ந்த சுங்கக் கட்டணம் - வாகன ஓட்டிகள் அவதி.!
40 toll plaza ticket price increase in tamilnadu
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள நாற்பது சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடிகளில் இரு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தபடவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும்" என்று தெரிவிக்கப்படுகிறது.
English Summary
40 toll plaza ticket price increase in tamilnadu