அதிர்ச்சி - தமிழகம் முழுவதும் 400 கோடிக்கு மது விற்பனை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மதுபானக் மதுக்கடைகள் நேற்று முதல் 19-ந்தேதி நாளை வரை மூன்று நாட்கள் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4-ந்தேதியும் மதுக்கடைகள் அடைக்கப்பட உள்ளது.

இதன் காரணமாக கடந்த 16-ந்தேதியே மதுக்கடைகள் முன்பு மதுபிரியர்கள் வரிசை கட்டி நின்று தேவையான மதுபாட்டில்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மது விற்பனை ரூ.400 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய அதிகாரிகள், "டாஸ்மாக் விற்பனை ஏப்ரல் 16-ந்தேதி அதிகம். அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.68.35 கோடி விற்பனை ஆனது. திருச்சி மண்டலத்தில் ரூ.58.65 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.57.30 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.55.87 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.49.10 கோடி என ஒரே நாளில் ரூ.289.29 கோடிக்கு விற்பனை ஆனது. தமிழகத்தில் வழக்கமான நாட்களை காட்டிலும், ஏப்ரல் 16-ந்தேதி நடைபெற்ற விற்பனை 2 மடங்கு அதிகமாகும்" என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

400 crores liquor sales in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->