#கோவை || ஆற்றில் இறங்கிய மாணவர்கள் 5 பேர் பலி!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையாறு சுங்கம் ஆற்றில் குளித்த மாணவர்கள் ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகில் எலுமிச்சம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்து வரும் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.  அவர்கள் பல்வேறு இடங்களில் சுற்றிப் பார்த்த பிறகு சோலையாறு சுங்கம் ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது மாணவர்கள் சிலர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிய வருகிறது.

இதில் நபில், வினித் குமார், தனுஷ், அஜய், சரத் ஆகிய 5 கல்லூரி மாணவர்கள் மூழ்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடன் சென்ற பின் மாணவர்கள் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து விரைந்த சென்ற தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கிய 5 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த ஐந்து பேரும் கோவை மாவட்டம் கிணத்துக்கா வடவு பகுதியில் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 college students died in Coimbatore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->