தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள்?...இதோ தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொது மக்கள் மற்றும் நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் இறுதியாக 38 வருவாய் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, பொள்ளாச்சி, விருத்தாசலம், கும்பகோணம், ஆத்தூர் மற்றும் செய்யாறு ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், 2025-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில், புதிய மாவட்டங்கள் உருவாக்கத்திற்கு  தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, விருத்தாசலம், கும்பகோணம், செய்யாறு மற்றும் ஆத்தூர் ஆகிய 5 புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பாக 2025-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று அறிவிப்பு வெளியாகவுள்ளது என்று ஒரு நாளிதழின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், இந்தப் புகைப்படம் பல மாதங்களாகப் பகிரப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள தமிழக அரசு,  இது போன்ற எந்த அறிவிப்பும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 new districts in tamil nadu here is tamil nadu government sensational announcement!


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->