பரபரப்பு! மீண்டும் கள்ளசாராயம்! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்து 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மழுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன். இவர் அடுப்புகரி வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக சாராயம் காய்ச்சி வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மேல்மருவத்தூர் போலீஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது சாராய ஊரல் மற்றும் காய்ச்சி வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தேவனை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சாராயத்தை காய்ச்சி தன்னிடம் வேலை செய்யும் பெருமாள், ராதாகிருஷ்ணன், மதுரை அய்யனார், ஆகியோருக்கு குடிக்க கொடுத்ததாக தெரியவந்துள்ளது. மதுராந்தகம் ஆர்.டி.ஓ தியாகராஜன் தலைமையில் மருத்துவ குழுவினர்  ஐந்து பேரையும் தேடி பிடித்து முழு மருத்துவ பரிசோதனை செய்தனர் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவ குழுவினர் தெரிவித்தார்கள்.

இருந்தாலும் அவர்களை உடல்நலத்தில் அக்கறை கொண்டு மாவட்ட நிர்வாகம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மழுவங்கரணை கிராமத்தில் கள்ள சாராயம் காய்ச்சிய தேவன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 persons admitted to hospital after drinking liquor near Madhuranthakam


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->