வடகிழக்கு பருவமழை 6 மாவட்டங்களில் குறைவாக பெய்யும்! வெளியான அதிர்ச்சி தகவல்!
6 districts predicted to receive less North East Monsoon rains
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் தொடங்கி ஜனவரி மாதம் வரை பெய்யும். அதே போன்று இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை குறிப்பிட்ட ஆறு மாவட்டங்களில் வழக்கத்திற்கு மாறாக குறைவான அளவு பெய்யும் என கணித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையத்தில் மழை முன்னறிவிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் கடலின் பூமத்திய ரேகை ஒட்டியுள்ள கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடல் நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆஸ்திரேலியாவிடமிருந்து நடப்பாண்டிற்கான வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான அளவு வடகிழக்கு பருவமழையை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர்த்து ஏனைய 31 மாவட்டங்களில் இயல்பான அளவில் வடகிழக்கு பருவமழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 456 மி.மீ, கோவையில் 369 மி.மீ, ஈரோட்டில் 295 மி.மீ, திருப்பூரில் 287 மி.மீ அளவுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
6 districts predicted to receive less North East Monsoon rains