10 அடி நீளம் கொண்டு 6 மலைப்பாம்புகள்: நினைச்சாலே பதறுதா.!!!! திக் திக் சம்பவம்.....
6 pythons measuring 10 feet long
கிருஷ்ணகிரி அடுத்துள்ள சவுட்டஅள்ளி கிராமத்தில் புகுந்த 10 அடி நீளம் கொண்ட 6 மலைப்பாம்புகளை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்.
கிருஷ்ணகிரியை அடுத்த சவுட்டஅள்ளி கிராமத்திற்குள் பாம்புகள் கூட்டம் கூட்டமாகப் புகுந்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் கிருஷ்ணகிரியில் உள்ள தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டனர். தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் இந்தக் கிராமத்திற்கு விரைந்து வந்து மலைப் பாம்பினைத் தேடினார்.

அப்போது ஈஸ்வரன் கோயிலுக்கு அருகே உள்ள ஒரு புதருக்குள் இருந்த 6 மலைப்பாம்புகளை, தீயணைப்பு துறையினர்ப் பத்திரமாக மீட்டனர். அந்த மலைப்பாம்புகள் சுமார் 10 அடி நீளம் கொண்டவை. அதனை அடுத்து மீட்கப்பட்ட 6 மலைப் பாம்புகளையும் தீயணைப்பு துறையினர் பத்திரமாகக் கிருஷ்ணகிரி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஒரே நேரத்தில் கூட்டம் கூட்டமாகக் கிராமத்திற்குள் புகுந்த 6 மலைப் பாம்புகள் ஊருக்குள் புகுந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
6 pythons measuring 10 feet long