8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு.. 60 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை.! - Seithipunal
Seithipunal


சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள இளையத்தாங்குடி அம்பேத்கர் நகர் தெருவை சேர்ந்த 8 வயது சிறுவன் கடந்த 2019 ஆம் ஆண்டு தெருவில்  விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கீழசேவல்பட்டியை சேர்ந்த கருப்பையா (வயது 60) என்பவர் சிறுவனுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து தனியாக அழைத்து சென்று தகாத முறையில் கொடூரமாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

 இதனால் சிறுவன் வேகமாக கத்தியுள்ளான். இதில் சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்ட ஊர் மக்கள் திரண்டு சென்று சிறுவனை மீட்டுள்ளனர். அங்கிருந்து கருப்பையா தப்பி ஓடிச்சென்று தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் கீழசேவல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இன்று போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, முதியவர் கருப்பையாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

60 years old man sexual Harrasment to 8 years old boy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->