பண்ருட்டியில் மாற்றுகட்சியை சேர்ந்த 610 பேர் அதிமுகவில் ஐக்கியம்!
610 dissidents join AIADMK in Panruti
பண்ருட்டியில் பாமக,திமுக மாற்றுகட்சியை சேர்ந்த 610 பேர் அதிமுக மகளிரணி துணைச்செயலாளர் சத்யாபன்னீர்செல்வம் சிறப்பான ஏற்பாட்டில் அ.இ.அண்ணா தி.மு.கழகத்தில் இணைந்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் பண்ருட்டி திருவதிகை எஸ். வி.மஹாலில்பாமக,திமுக மற்றும் மாற்றுகட்சியை சேர்ந்த 610 பேர் அ.தி.மு.கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று அ.இ.அண்ணா தி.மு.கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக மகளிரணி துணைச்செயலாளர் பண்ருட்டி சத்யாபன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் சிறப்பான ஏற்ப்பாட்டில் கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர், கடலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்,முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்,மாவட்ட அம்மா பேரவை முன்னாள் செயலாளர், பண்ருட்டி முன்னாள் நகரமன்ற தலைவர் ப.பன்னீர்செல்வம் ஆகியோரது முன்னிலையில்,
கடலூர் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மு.உதயா, தலைமையில் மாற்று கட்சிகளில் இருந்து 610 பேர்கள் தங்களை அ.இ.அண்ணா தி.மு.கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அதிமுக கழகத்தில் இணைந்த அனைவருக்கும் கழக சால்வை அணிவிக்கப்பட்டு வாழ்த்துகளை பெற்றுக்கொண்டனர்.
கழகத்தில் இணைந்தவர்கள், 2026 ல் தமிழகத்தில் 'புரட்சித்தமிழர்' எடப்பாடியார் அவர்களை முதலமைச்சராக்க அயராது பாடுபடுவோம் என உறுதி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட,ஒன்றிய,நகர,பேரூராட்சி வார்டு,கிளை-கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் , முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள்,முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் இந்நாள் முன்னாள் நகர பேரூர் மன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள்,கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
English Summary
610 dissidents join AIADMK in Panruti