மூளைச்சாவு அடைந்த 6ம் வகுப்பு சிறுவன்! 6 உடல் உறுப்புகள் தானம்!
6th grade boy who is brain dead Donate 6 body parts
திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள பெரியகோட்டை நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. ஒட்டன்சத்திரம் போலீஸ் காவல் நிலையத்தில் பழனிச்சாமி ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜசுதா. இவர்களுக்கு ஹரீஸ் (வயது 13), கிஷோர் (11), ஆகிய 2 மகன்கள் உள்ளனர். எம்.எம்.கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருவரும் படித்து வருகின்றனர்.
கிஷோர் என்ற சிறுவனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பெற்றோர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிறுவனை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். முதலில் சிறுவனுக்கு காய்ச்சல் மட்டும் இருந்த நிலையில் பின்னர் வலிப்பு ஏற்பட்டு மேலும் அச்சிறுவனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அந்த சிறுவன் கிஷோர் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து மூளைச்சாவு அடைந்த தனது மகனின் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவெடுத்தனர். அதன்படி தனது மகனின் உடல் இன்று திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கி அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், அரசு மருத்துவமனையில் அந்த சிறுவனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற 6 உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அவரது பெற்றோர் சிறுவயதில் தனது மகன் உயிரிழந்த சூழ்நிலையை தாங்க முடியாமலும் சிறுவனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்த சம்பவமும் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
6th grade boy who is brain dead Donate 6 body parts