தொடர் விடுமுறை - தமிழகத்தில் 850 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.!
850 special bus run in tamilnadu for vinayagar chathurti holiday
தொடர் விடுமுறை - தமிழகத்தில் 850 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.!
தமிழக அரசு பொதுவாக வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை, பண்டி காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் சிரமம் இல்லாமல் செல்வதற்காக கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
அந்த வகையில், தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி என்று தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், சுபநிகழ்ச்சிகளுக்கும் சென்று வருவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழக அரசு போக்குவரத்துக்கு கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு நாளை 15-ந் தேதி தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும், 16-ந் தேதி கூடுதலாக 200 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், பொதுமக்கள் 18-ந் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு வசதியாக தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு பேருந்துகளை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
850 special bus run in tamilnadu for vinayagar chathurti holiday