9-ஆம் வகுப்பு சிறுமிக்கு அதிமுக பிரமுகரால் கூட்டு பாலியல் வன்கொடுமை.! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி பகுதியில் வைகை நகரை சேர்ந்த சிகாமணி என்பவர் நகராட்சி மூன்றாவது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்து வருகின்றார். இவர் ஜி.எஸ்.சிட்டி லேண்ட் ப்ரோமோட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் மாதவன் நகரில் வசித்து வரும் ராஜா முகமது என்பவருடன் சேர்ந்து அவருடைய காரில் ஒன்பதாம் வகுப்பு சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பார்த்திபனூர் பகுதியில் இருக்கும் ஒரு மஹாலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இவர்களுடன் சேர்ந்து மறத்தமிழர் சேனை மாநில தலைவர் புதுமலர் பிரபாகரன் என்பவரும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு இருக்கின்றார். மாணவியை மயக்கி அழைத்து வர இவர்களுக்கு தூதாக செயல்பட்டு இருப்பது இரண்டு பெண்கள் என்பது தெரியவந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜி எஸ் சிட்டி புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் உமா என்ற 34 வயது பெண்மணியும், கயல்விழி என்ற 45 வயது பெண்மணியும் தான் இந்த கொடூர செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். சிறுமி அளித்த புகாரில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 21ஆம் தேதி வரை பலர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்து இருக்கிறார்.

இந்த புகாரின் பேரில் தற்போது சிகாமணி ,புதுமலர் பிரபாகரன், ராஜா முகமது, உமா மற்றும் கயல்விழி ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் நிலையில் ,பல்வேறு முக்கிய புள்ளிகளும் இதில் தொடர்புபட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 Th Student Girl gang Raped by admk Admin in paramakkudi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->