மின்கம்பத்தால் நடந்த விபரீதம்!!! தேன் ருசிக்க சென்ற கரடி ஷாக் அடித்து உயிரிழந்ததாம்...!
A bear that went to taste honey died after being electrocuted caused by an electric pole
நீலகிரி குன்னூரில் அருகே சமீப காலமாக கரடிகள் நடமாட்டத்தின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்த கரடிகள் குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு கிராம பகுதிகளில் நுழைகிறது.
இதனால் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருபவர்கள் அச்சத்திலுள்ளனர்.இந்நிலையில், நான்செட் பகுதியிலுள்ள வரதராஜன் என்பவரின் வீட்டிற்கு அருகே கரடி ஒன்று சுற்றித்திரிந்தது.

அப்போது மின்கம்பத்தின் மேல் தேன் கூடு இருப்பதை பார்த்த கரடி மின்கம்பத்தில் ஏறியது.ஆவலாக தேனை ருசிக்க சென்ற கரடியின் உடல் மின்கம்பியில் உரசி மின்சாரம் தாக்கி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கரடியின் உடலை மீட்டனர்.மேலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் கரடியின் உடலானது தகனம் செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனையில், இது 5 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி என தெரியவந்துள்ளது. தேனை ருசிக்க வந்த கரடி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு தமிழ்நாடு அரசு வனத்துறையினர் சார்பில் ஏதாவது செய்தாகவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
A bear that went to taste honey died after being electrocuted caused by an electric pole