நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவர் கைது!!!
A case was registered under the POCSO Act yesterday and two people were arrested
அரியலூர் மாவட்டம் ஓலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் மகன் 30 வயதான பிரவீன் குமார். இவர் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் 15 வயதான பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்குப் பிரவீன் குமார் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இதனைச் சிறுமியின் மூலம் கேட்டு அறிந்த பெற்றோர் பிரவீன் குமாரைக் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்து பிரவீன் குமார் அவரது தந்தையிடம், இதனைக் கூறிய போது அவரும் பிரவீன் குமாருக்கு ஆதரவாக நின்றுள்ளார்.

இருவரும் சேர்ந்து சிறுமியையும், சிறுமியின் பெற்றோரையும் கொலைச் செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். உடனே விரைந்து வந்த போலீசார் பிரவீன் குமாரையும், சிவகுருநாதனையும் கைது செய்து போக்சோ வழக்கின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இருவரும் இணைந்து சிறுமியையும் பெற்றோரையும் மிரட்டியதை ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
English Summary
A case was registered under the POCSO Act yesterday and two people were arrested