இறந்தவர் உடலை யார் எடுப்பது? நகர போலீஸ் - ரயில்வே போலீஸ் யுத்தம்! செங்கல்பட்டில் 5 மணி நேரமாக காத்திருக்கும் உடல்!
A dead body wait 5 more hours in chengalpet railway station
அடையாளம் தெரியாத நபர் ஒருவர், உயிரிழந்த நிலையில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கிடந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ரயில் நிலையத்தின் முன்பதிவு மையத்தில் இறந்தவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவர் உடலைப்பார்த்து 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இறந்தவரின் உடல் கீழே தரையில் கிடத்தப்பட்டிருக்கும் நிலையில், பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடலை யார் கைப்பற்றுவது என்பதில் செங்கல்பட்டு நகர போலீசார் - ரயில்வே போலீசாருக்கு இடையே ஒரு யுத்தமே நடைபெற்று வருகிறது. இரண்டு போலீசாருக்கும் இடையேயான எல்லை பிரச்சனை காரணமாக உடலை எடுப்பதில் தாமதம் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
மக்கள் கூட்டம் நெரிசல் மிகுந்த இடத்தில், ஒருவர் இறந்து கிடக்கும் போது அனைவரும் அவரவர் வேலையை பார்த்து நகர்ந்திருப்பது மனிதம் மறித்து போனதோ என கேட்கவே வைக்கிறது. குறைந்தபட்சம் இறந்த உடலின் மேல் ஒரு துணியை போர்த்தி வைக்கக் கூட மனம் வரவில்லையே!
English Summary
A dead body wait 5 more hours in chengalpet railway station