மதுரையில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரௌடி; போலீசாரை தாக்கியதால் பயங்கரம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் படுகொலை, பாலியல் வன்கொடுமைகள், செயின் பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள், அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த்தி வருகிறது. ஆனால், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில், போலீசார் சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனையடுத்து, மதுரை அருகே போலீஸ் என்கவுண்ட்டரில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரை துரத்திப் பிடிக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்துள்ளார்.

மதுரையில் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடைய நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் 22-ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் ரவுடி காளீஸ்வரன் 04 பேர் கொண்ட மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.  இதில் காளீஸ்வரன் துடிதுடித்து உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். 

ரவுடி காளீஸ்வரன் கொலை வழக்கை விசாரிக்க 02 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இதில், ரௌடி சுபாஷ் சந்திரபோஸ் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீஸ் விசாரணையில் கண்டறிந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த ரௌடி சுபாஷ் சந்திரபோஸ் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். 

மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் காட்டில் பதுங்கிஇருந்துள்ளார். இவரை பிடிக்கச் சென்ற போது, சுபாஷ் தன்னை பிடிக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது தற்காப்புக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் சுட்டதில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் உயர் அதிகாரிகள் மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A famous rowdy was encountered in Madurai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->