சென்னையை கலக்கும் புதிய வகை போதைப்பொருள் ; 12 மணி நேரம் நிலவில் மிதப்பது போல இருக்கும் ! - Seithipunal
Seithipunal


கஞ்சாவை சாப்பிடும் கேக்குடன் இணைத்து கஞ்சா கேக் செய்து விற்பனை ! உயர் ரக போதை மாத்திரைகள் மற்றும்போதை ஸ்டாம்புகள் ஆன்லைனில் ஆர்டர் !

நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் என்ற புதிய வகை போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. நுங்கம்பாக்கம் போலீசார் கஞ்சா கேக் வாங்குவது போல சென்று நுங்கம்பாக்கத்தில் உணவு கடை நடத்தி வருவம் ரோஷன் என்பவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அவரும் அவரது நண்பரான டாட்டூக்கடை நடத்தி வரும் தாமஸ் என்பவரும் இணைந்து கஞ்சா கேக் தயாரித்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களிடமும் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. கஞ்சா கேக்குடன் உயரக போதை மாத்திரை, உயர் ரக போதை ஸ்டாம்ப் ஆகியவற்றை கல்லூரி மாணவர்கள் மற்றும் டிஜே பார்ட்டிகளில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரோஷன் மற்றும் தாமஸ் ஆகியோர் குறைவான விலைக்கு கஞ்சா வாங்கி சந்தேகம் வராத வாறு சாப்பிடும் கேக்குடன் இணைத்து கஞ்சா கேக் செய்துள்ளனர். இந்த கஞ்சா கேக் ஒன்று 3 ஆயிரம் ரூபாய் வரை கல்லூரி இளைஞர்களிடம் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவர்களின் நண்பர்கள் கார்த்திக், ஆகாஷ், பவன் கல்யாண் ஆகியோர் பட்டப்படிப்பு படித்துள்ளதால் படிப்பறிவை வைத்து பெங்களூர், ஹைதராபாத் போன்ற பகுதிகளில் உயர் ரக போதை மாத்திரைகள், உயர்ரக போதை ஸ்டாம்புகள் ஆகியவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து பின் ஆகாஷ், கார்த்தி ஆகியோர் இருசக்கர வாகனங்கள் மூலம் நேரடியாக சென்று பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டாட்டூ கடை நடத்தி வரும் தாமஸ் என்பவரது கடைக்கு டாட்டு போட வரும் ஆண்கள் மற்றும் பெண்களை குறி வைத்து வாடிக்கையாளர்களாக தாமஸ் மாற்றியுள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் கஞ்சா கேக், உயர் ரக போதை மாத்திரைகள் உயர் ரக போதை ஸ்டாம்ப் ஆகியவற்றை விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.கொரோனா ஊரடங்கு காலங்களில் வேலை இன்றி இருந்ததால் போதை பொருள் விற்பனையில் ஐந்து நபர்களும் இறங்கி போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளனர்.

சனிக்கிழமையில் நட்சத்திர விடுதியின் வெளியே இருசக்கர வாகனத்தில் வந்து போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

"தாங்கள் விற்பனை செய்யும் போதை பொருட்கள் உட்கொண்டால் 12 மணி நேரம் வரை நிலாவில் மிதப்பது போல இருக்கும்" என கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும்,கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 33 உயர் ரக போதை மாத்திரைகள், 19 உயர்ரக போதை ஸ்டாம்புகள், 10 கஞ்சா கேக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A new type of drug sale in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->