பல கிலோ தங்கத்துடன் கவிழ்ந்த வேனை சுற்றி வலைத்த மக்கள்.. ஈரோட்டில் பரபரப்பு.!!
A van with 810kg gold overturned inn erode
ஈரோடு மாவட்டம் பவானி அருகே 666 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சமத்துவபுரம் பகுதியில் விபத்து நிகழ்ந்த போது 800 கிலோ தங்கத்தை ஏற்றுச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தங்க நகைகளை எடுத்துச் சென்ற வாகனத்தின் ஓட்டுனர் சசிகுமார் மற்றும் பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில் இருவரும் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான வேலை தங்கம் இருப்பதை அறிந்த பொதுமக்கள் வேலை சுற்றி நின்றதால் காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.
பின்னர் வணிகவரித்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் தங்க நகைகள் சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. 810 கிலோ தங்க நகைகளோடு வேன் கவிழ்ந்து விபத்துக்கான சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
A van with 810kg gold overturned inn erode