மருத்துவமனைக்கு சென்ற சிறுமி.. தாய் தந்தையர் கைது..! அரியலூரில் பகீர் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்ற நபர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவீட்டாரின் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

இதன் பின்னர் சிறுமி கர்ப்பமாக இருந்து வந்துள்ளார். எனவே மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சிறுமி சென்றுள்ளார். அப்போது மருத்துவருக்கு 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் காவல்நிலையத்தில் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி பின்னர் அவரை கர்ப்பமாக்கிய சரவணனை கைது செய்திருக்கின்றனர். 

போக்சோ சட்டத்தின் கீழ் சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தாய் தந்தையர் மீதும் சரவணனின் தாய் தந்தையர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aariyalur child marriage case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->