ஏசியுடன் கூடிய ஹெல்மெட் - போக்குவரத்து போலீசாருக்கு அறிவிப்பு.!
ac helmet provide to traffic police in chennai
கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும். அதிலும் குறிப்பாக அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். ஆனால், புவி வெப்பமயமாதலுக்கு பிறகு பிப்ரவரி மாத இறுதியிலேயே கோடை வெளியில் சுட்டெரிக்கத் தொடங்கி விடுகிறது.
இந்த வெயில் சென்னை போன்ற பெருநகரங்களில் சாலையில் நின்று கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசாரை படாதபாடு படுத்திவிடும். இதன் காரணமாக, பெருநகர சென்னை போலீஸ் ஆணையர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலையில் நின்றுகொண்டு போக்குவரதத்தை ஒழுங்குபடுத்தும் போலீசாருக்கு கோடை காலத்தில் பித் வகை தொப்பி வழங்கப்படும்.

இந்த தொப்பி வெயிலில் இருந்து ஓரளவு அவர்களை காக்கும் என்றாலும் காற்றோட்டமான நிலையை தராது. இந்த நிலையில், சென்னை அருகே புதிதாக உதயமான ஆவடி காவல் ஆணையர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசாருக்கு ஏ.சி.வைத்த ஹெல்மெட்டை ஆணையர் சங்கர் வழங்கி அசத்தியுள்ளார்.
இந்த ஹெல்மெட் இயற்கை நாரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரி மூலம் ஏ.சி.மெஷினை இயங்கச் செய்து குளுகுளு காற்று வழங்கப்படுகிறது. இந்த புதிய முயற்சி போக்குவரத்து போலீசாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ac helmet provide to traffic police in chennai