அதிக பசியால் போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோடிய வெளிநாட்டு கைதி - கோவையில் பரபரப்பு.!!
accuest escpe in police custady for Hungry
அதிக பசியால் போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோடிய வெளிநாட்டு கைதி - கோவையில் பரபரப்பு.!!
ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் பெர்லின் ஷெரில். சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டுக்கு வந்த இவர், கோவை மாவட்டத்தில் ஆனைமலையில் உள்ள ஒரு ரெசார்ட்டில் தங்கியிருந்தார். அப்போது, அவர் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்ததாக போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்திய போது விசா காலம் முடிந்த பிறகும், இந்தியாவில் தங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பெர்லின் ஷெரில் மீது கோவை இன்றியமையா பண்டங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இதன் காரணமாக பெர்லின் ஷெரில் விசாரணை கைதியாக, திருச்சியிலுள்ள முகாமில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், பெர்லின் ஷெரில் வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்திற்கு போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார். அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த ஷெரிலுக்கு பசி ஏற்பட்டதால், அவர் போலீஸாரிடம் உணவு கேட்டுள்ளார்.
அதற்கு போலீசார் விசாரணை முடிந்த பின் உணவு வாங்கித்தருவதாக தெரிவித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஷெரில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் ஷெரில் மிகவும் பசிப்பதாகக் கூறி போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோடி உள்ளார்.
இதைப்பார்த்த போலீசார் அவரைப் பின் தொடர்ந்துச் சென்று, சமாதானம் செய்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கிக் கொடுத்தனர். இந்த சம்பவத்தால் கோவை நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
accuest escpe in police custady for Hungry