முதலமைச்சராக, முன்னாள் முதலமைச்சரின் மகனாக நடிக்கும் நடிகர் ஜீவா! செம்ம அப்டேட்! - Seithipunal
Seithipunal


ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கையை தழுவி 'யாத்ரா' என்ற தெலுங்கு திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த திரைப்படத்தை மஹி வி ராகவ் இயக்கி இருந்தார். முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டியின் கதாபாத்திரத்தில் மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்திருந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் இரண்டாவது பாகம் 'யாத்திரா 2' என்ற பெயரில் உருவாகி வருகிறது.

முதல் பாகத்தை உருவாக்கிய இயக்கிய மஹி வி ராகவ் தான் இந்த இரண்டாவது பாகத்தையும் இயக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டியின் மகனும், தற்போதைய ஆந்திர மாநில முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில், நடிகர் ஜீவா நடிக்க உள்ளார் என்று பட குழு அறிவித்துள்ளது.

மேலும், அடுத்த மாதம் நான்காம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

அண்மையில் இந்த படத்திற்கான போட்டோ சூட் நடந்தது. இதில் நடிகர் ஜீவா, ஜெகன்மோகன் ரெட்டி வேடத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் பார்ப்பதற்கு ஜகன்மோகன் ரெட்டி போலவே உள்ளீர்கள் என்று ஜீவாவை பாராட்டியதாக பட குழு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Jiiva Act CM role


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->