வடமாநிலங்களிலும் திராவிட சித்தாந்தம் - நடிகர் சத்யராஜ் அறைக்கூவல்! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வட மாநிலங்களிலும் திராவிட சித்தாந்தத்தை பரப்ப வேண்டும் என்று, திரைப்பட நடிகரும் திமுகவின் தீவிர ஆதரவாளருமான நடிகர் சரத்ராஜ் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் தெரிவித்ததாவது, இந்தியாவின் வட மாநிலங்களில் கல்வி தரம் சரியாக இல்லை. அதனால்தான் வட மாநிலத்திலிருந்து அதிகமான தொழிலாளர்கள் தமிழகத்துக்கு வருகின்றனர்.

மேலும் வட மாநிலங்களில் சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாநிலங்களில் நடக்கும் கொடுமைகளை தடுக்க முடியும்.

தமிழகத்தில் திராவிட சித்தாந்தத்தை பாமர மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததைப் போலவே வட மாநிலங்களிலும் திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் அம்மாநிலங்களிலும் திராவிட மாடல் வளர்ந்து, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் நீங்கும்.

குறிப்பாக அசாம், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் திராவிட மாடலை கொண்டு சேர்க்கும் கருவியாக நான் செயல்படுவேன் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தொழிலாளர்களின் நலனை முக்கியமாக நினைத்தார். அதனால்தான் வாடகை கார் ஓட்டுநர் நல வாரியம் ரிக்ஷா ஓட்டுநர் நல வாரியம் உள்ளிட்டவட்டை அவரால் கொண்டுவர முடிந்தது என்றார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Sathyaraj say about Dravidian ideology


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->