துப்புரவு தொழிலாளர்களுடன் இணைத்து புத்தாண்டு கொண்டாடிய கவுதமி..!
actress gautami celebrate new year with Cleaning labor
தமிழ் திரைத்துறையில் 1988 ஆம் ஆண்டு ’குரு சிஷ்யன்’ படத்தில் முதன்முதலாக நடிகை கௌதமி அறிமுகமாகமானார். இதை தொடர்ந்து, நடிகை கௌதமி 80 களில் வெளிவந்த படங்களில் பிரபலம் ஆகி, முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன் பின்பு இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததுடன், பாராட்டுகளையும் பெற்றார்.
இதை தொடர்ந்து, நடிகை கௌதமி தற்போது 'life again' என்னும் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்த தொண்டு நிறுவனமானது தன்னம்பிக்கை, வாழ்க்கையின் முக்கியத்துவம்,புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான மனவலிமையும் வழங்குகிறது.
இந்த நிலையில், தற்போது இவர் புத்தாண்டு கொண்டாட்டத்தை துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறார். மேலும், அவர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கி மகிழ்வித்திருக்கிறார். மேலும், அவர்களிடம் நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை, இந்த நாடு தூய்மையாக இருக்க காரணம் நீங்கள் தான், மேலும் இந்த புத்தாண்டை உங்களுடன் சேர்ந்து கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
English Summary
actress gautami celebrate new year with Cleaning labor