ஈஷா சிவராத்திரியில் இந்தாண்டு இத்தனை நடிகைகளா.?! பட்டியல் இதோ.! - Seithipunal
Seithipunal


இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மகா சிவராத்திரி. மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபடுவர். அவ்வாறு இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டால் கடவுளின் ஆசிகளை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

இந்த நிலையில் நாடு முழுவதும் மகா சிவராத்திரி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று பிரம்மாண்டமான முறையில் இந்த சிவராத்திரி விழா நடக்கின்றது. இதில் பங்கு கொள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழகம் வந்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்த விசேஷத்தில் இந்திய நடிகைகள் பலரும் கலந்து கொள்வது வழக்கம். கடந்தாண்டு நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா, கங்கனா ரணாவத், தமன்னா ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இந்தாண்டு நடிகைகள் ஈஷா ரெப்பா, மிருணாளினி ரவி, மேகா ஆகாஷ் மற்றும் மமதா மோகந்தாஸ் உள்ளிட்ட நடிகைகள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். மேலும், இதில் பல இன்ஸ்டாகிராம் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress participate in maha Shivaratri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->