உடுமலைப்பேட்டை கவுசல்யா சங்கரின் முடிதிருத்தும் கடையை திறந்த தனுஷ் பட நடிகை.!
Actress Parvathy opens Kowsalya sankar saloon
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர், கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் கௌசல்யாவின் பெற்றோரால் கடந்த 2016 இல் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இது குறித்து ஆறு பேருக்கு தூக்கு தண்டனை மற்றும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அதன் பின் நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தியை கவுசல்யா இரண்டு ஆண்டுகளுக்கு பின் மறுமணம் செய்து கொண்டார்.
கவுசல்யா தற்போது தீவிர சாதி எதிர்ப்பு ஆர்வலராக இருந்து வருகிறார். பல இயக்கங்களில் அவர் பணியாற்றி வருகின்றார். அவருக்கு மத்திய அரசு வேலை கிடைத்தது. அரசியல் ரீதியாக அவரால் சரியாக செயல்பட முடியவில்லை என்று தனது வேலையில் இருந்து அவர் விலகினார்.
இந்த நிலையில், இன்று கோவை வெள்ளலூர் பகுதியில் ஒரு சலூன் கடையை துவங்கி இருக்கிறார். 10 கிலோமீட்டர் சுற்றளவில் எங்கும் சலூன் கடைகளில் இல்லை என்றும், சமூகத்தில் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களை இங்கே வேலைக்கு அமர்த்த போவதாகவும், கௌசல்யா கூறியுள்ளார்.
இந்த சலூன் கடையை பிரபல மலையாள நடிகையும், பெண்ணியவாதியுமான பார்வதி திறந்து வைத்துள்ளார். இந்த கடை திறப்பு விழாவிற்கு பிரபல திரைப்பட நடிகர் சத்யராஜ் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Actress Parvathy opens Kowsalya sankar saloon