நீக்கப்பட்ட 528 பேர்! தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக பரபரப்பு புகார்!
ADMK Complaint to TN Election Head 2024
சென்னை தி.நகர் சட்டமன்ற தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் 528 பேரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க அதிமுக வலியுறுத்தியுள்ளது.
நேற்று அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் சென்னை தலைமை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை சந்தித்து இதனை புகார் மனுவாக அளித்துள்ளார்.
அவரின் அந்த மனுவில், "தேர்தலை முன்னிட்டு கடந்த டிசம்பர் மாதம் 20, 21 ஆகிய தேதிகளில் தி.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 528 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதுடன், நீக்கப்பட்ட அந்த வாக்காளர்கள் அனைவரும் அதேபகுதியில் தான் வசித்து வருகின்றனர் எனபது தெரியவந்துள்ளது.
எனவே, நீக்கப்பட்ட அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வழிவகை செய்ய வேண்டும். அல்லது உரிய வாக்குச்சீட்டு, வாக்கு பதிவதற்கான அடையாள அட்டைகள், வைத்திருக்கிற போது அவர்களுக்கு வாக்களிக்கிற தகுதியை வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
English Summary
ADMK Complaint to TN Election Head 2024