5.5லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு: திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
ADMK EPS Condemn to DMK Govt MK Stalin Job
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் வேலைவாய்ப்பு குறித்த செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், 2021 சட்டமன்ற தேர்தலின்போது, திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த பல்வேறு வாக்குறுதிகளில், தமிழக அரசு துறைகளில் 5.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், 3.5 லட்சம் இளைஞர்கள் அரசு அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்திருந்தார்.
ஆனால், உண்மையில், புதிய பணியாளர்களை நியமிப்பதற்குப் பதிலாக, ஓய்வு பெற்றவர்களையே ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்திவருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
குறிப்பாக தலைமைச் செயலகத்திலேயே ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணிபுரியவைக்கப்படுவதாகவும், இதனால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.
மேலும், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையில் தற்காலிக ஆலோசகராக பணியாற்ற ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நாளிதழ்களில் வந்துள்ள விளம்பரத்தையும் எடப்பாடி பழனிச்சாமி கனிடித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக தேர்வு நடத்தி, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, தகுதியான இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
ADMK EPS Condemn to DMK Govt MK Stalin Job