அதிமுக முக்கிய புள்ளியின் மகன் கைது! பரபரப்பு சம்பவம் குறித்த முழு விவரம்! - Seithipunal
Seithipunal



மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பாஜக நிர்வாகியை தாக்கிய வழக்கில், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக ஒன்றிய செயலாளருமான நீதிபதி என்பவருக்கும், பாஜகவை சேர்ந்த போஸ் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது.

இதற்கிடையே அதிமுக நிர்வாகி, முன்னாள் எம்எல்ஏ நீதிபதிக்கு எதிராக பாஜக நிர்வாகி போஸ் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

சம்பவம் நடந்த அன்று நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பிய போது, பாஜக நிர்வாகி போஸ் மீது அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதியின் மகன் இளஞ்செழியன், அவரின் உதவியாளர் ராஜா ஆகியோர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த போஸ், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் எம்எல்ஏ மகன் இளஞ்செழியன், அவரின் உதவியாளர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Ex MLA Son attested Usilampatti madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->