மூன்று மதங்களுக்குப் பிறகு கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தருமபுரி பெண்ணின் உடல் ஒப்படைப்பு.!
after three months kerala police submit woman body in relatives
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நாகவதி அணை அருகே எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன். இவர் மனைவி பத்மா. இவர் சில வருடங்களாக கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அருகே பொன்னுருன்னி பகுதியில் வசித்து வந்தார். அங்கு கடவந்திரா என்ற இடத்தில் லாட்டரி சீட்டு விற்று வந்தார்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி லாட்டரி விற்பனைக்காக சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது உறவினர்கள் அளித்த புகாரின் படி, கொச்சி போலீசார் விசாரணை செய்தனர். இதேபோன்று, சில மாதங்களுக்கு முன்பு கொச்சி காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் என்ற பெண்ணும் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில், போலீசார் இரண்டு பேரின் மொபைல் எண்களை வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர்கள் இருவரும் கடைசியாக பத்தனம்திட்டா அருகே திருவல்லா என்ற இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதில், இருவரும் நரபலிக்காக கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, கொச்சியை சேர்ந்த முகமது ஷாபி என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, பத்மாவதியின் சொந்த ஊரான எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் சென்று விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, புதைக்கப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களை போலீசார் தோண்டி எடுத்த பிறகு, பத்மாவின் உடலை அடையாளம் காட்டுவதற்கு, அவரது உறவினர்களை வரவழைத்தனர்.
அங்கு பல்வேறு நடவடிக்கைகள் முடிந்தவுடன் இன்று பத்மாவின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், பத்மாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு நாளை அடக்கம் செய்யப்படும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
after three months kerala police submit woman body in relatives