புதுச்சேரியில் அக்னி வீர் திட்டத்தில் ஆட்தேர்வு..விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு!
Agniveer scheme recruitment in Puducherry District Collector invites you to apply
அக்னி வீர் திட்டத்தில் ஆட்தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் புதுச்சேரியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில் நுட்பப்பணி, எழுத்தர், பண்டக காப்பாளர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் சேர சுமார் 25 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஏப்ரல் 10-ந் தேதி கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இளைஞர்களின் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது விண்ணப்பிக்க இம்மாதம் வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை கடைசி நாளாகும். அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் ஆட்தேர்வுக்கு புதுச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் விண்ணப்பிக்கலாம்.22.04.2025 அன்று தாகூர் கலைக் கல்லூரியில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தகுதியான இளைஞர்களும் அக்னி வீர் திட்டத்தில் இணையும் வகையில் இணையதளத்தில் பதிவு செய்வது மற்றும் அக்னிபாத் திட்ட விழிப்புணர்வு முகாம் 22.04.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு தாகூர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளன. மேலும் வரும் 25-ஆம் தேதி வரை அந்தந்த பள்ளி கல்லூரிகளிலும் விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற உள்ளன. புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் அக்னிவீர் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் விண்ணப்பிக்க தேவையான ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செயலில் உள்ள கைபேசி எண், மின் அஞ்சல் முகவரி, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, எஸ்.எஸ். எல்.சி., பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், விளையாட்டு மற்றும் என். சி.சி. சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். மேலும், கூடுதல் விவரங்க ( www.joinindianarmy.nic. in ) என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல் தெரிவித்துள்ளார்.
English Summary
Agniveer scheme recruitment in Puducherry District Collector invites you to apply